Friday, May 2, 2025

ஆன்ம அவத்தைகள் -3 - தாமல் கோ.சரவணன்

ஆன்ம அவத்தைகள் - பாகம் 1


பெரிய வசதிமிக்க ஒரு வீடு இருக்கிறது அவ்வீட்டிற்கு உரிமையாளர் ஒருவர் இருக்கிறார் அவர் அவ்வீட்டின் வரவேற்பறையில் இருக்கும்போது வருகின்ற விருந்தினர்களை வரவேற்று உபசரிப்பார். செய்தித்தாள் படிப்பார், தொலைக்காட்சியில் ஏதேனும் நிகழ்ச்சிகளைப் பார்ப்பார், வீட்டில் இருக்கும் எல்லோருடனும் சேர்ந்து ஏதேனும் பேசி மகிழ்வார். அந்த உரிமையாளர் சமையலறைக்கு சென்றுவிட்டால் அங்கே காய்களை நறுக்குவதும், சுவையான சமையலைச் செய்வதும், சோறு, குழம்பு, பொறியல் என்று பக்குவமாக சுவைபார்த்து சமைப்பதும் செய்வார். பாத்திரங்கள் கழுவுவார். அவரே படுக்கையறைக்குச் சென்று விட்டால் மெத்தையை சரிசெய்து மேலே படுத்துக்கொண்டு போத்திக் கொண்டு தூங்குவார். பூஜையறைக்கு சென்றால் வழிபாட்டுக் கிரியைகளைச் செய்வார். கழிவறைக்குச் சென்றால் மல, ஜலம் கழிப்பார். அந்தப் பெரிய வீட்டில் அவ்வீட்டிற்குரிய உரிமையாளர் ஒவ்வொரு அறையில் ஒவ்வொரு மாதிரியான அனுபவங்களைப் பெறுகிறார் அல்லது தொழில் செய்கிறார். இப்போது அந்த வீட்டில் அவ்வுரிமையாளர் எங்கே இருப்பார் என்று கேட்டால், என்ன சொல்ல முடியும்? சமைப்பதாய் இருந்தால் சமையலறையில் இருப்பார், தூங்குவதாய் இருந்தால் படுக்கை அறையில் இருப்பார், குடும்பத்தோடு நேரம் செலவிடுகிறார் என்றால் வரவேற்பறையில் இருப்பார். ஒவ்வொரு அனுபவத்தைப் பெறுகிறபோது, ஒவ்வொரு தொழிற்படுகிற போது அதற்குரிய அறையில் இருப்பார். ஆனால் தெருவில் இருந்துபார்க்கின்றவர்கள் அவர் வீட்டில் இருக்கிறார் என்று பொதுவாக சொல்வார்கள் ஆனால் உள்ளே இருந்து பார்த்தால்தான் அவர் எந்த அறையில் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று தெரியும். இப்படி அந்த உரிமையாளர் ஒவ்வொரு அறையிலும் பெறுகின்ற அனுபவங்கள் தான் காரிய அவத்தைகள் இதை அப்படியே கொண்டுவந்து உங்கள் ஆன்மா மற்றும் உடம்போடு பொருத்திப் பார்க்கின்ற போது மிகச் சுலபமாக விளங்கிக் கொள்ளலாம்.

துரியம் கடந்த சுடர் - 3 - தூண்டு சுடரனைய சோதி - அருணாச்சலம் மகாராஜன்

துரியம் கடந்த சுடர் 1

துரியம் கடந்த சுடர் 2

தமிழ்ப் பெரும்புலவர், திருநெறித் தவமணி, சொல்லின் செல்வர் திரு. கி.வா.ஜகந்நாதன் அவர்கள் உரை எழுதிய கந்தபுராணம் புத்தகம் என் இளமைக் கால வாசிப்புகளில் முக்கியமான ஒன்று. தமிழின் முதன்மையான நாட்டாரியல் அறிஞரான திரு. அ. கா. பெருமாள் அவர்கள் தலைமையில், பெரும் பேராசிரியர்கள் மற்றும் ஜெயமோகன் உட்பட முதன்மை எழுத்தாளர்களின் ஆசிரியத்துவத்தில் தமிழ் விக்கி என்னும் தகவல் களஞ்சியம் இணையத்தில் இருக்கிறது. இன்று தமிழின் முதன்மை ஆளுமைகள், இலக்கியங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் வேண்டுமெனில் நாட வேண்டிய இணையப்பக்கம் என அதைத் தயங்காமல் சொல்வேன். அதில் கி.வா.ஜ வைப் பற்றிய பதிவில் அவரின் நாட்டாரியல் துறை பங்களிப்பை வாசித்த போது பெரும் வியப்படைந்தேன். கி.வா.ஜ என்றால் என் நினைவுக்கு வந்ததெல்லாம் அவரின் மரபிலக்கியம் சார்ந்த பெரும் பங்களிப்புகள் தாம், குறிப்பாக பெரிய புராண உரைகள் மற்றும் முதலில் கூறிய கந்தபுராண உரை நூல் போன்றவை. ஆனால் அவர் அவை மட்டுமல்ல என அந்த பதிவு கூறியது. பல நாட்டார் பாடல்களை தமிழ்நாடெங்கும் அலைந்து திரிந்து, மக்களோடு மக்களாகப் பழகி சேகரித்திருக்கிறார். பதிப்பிக்கவும் செய்திருக்கிறார். அவற்றை நாடோடி இலக்கியம் என்றே வகைப்படுத்துகிறார். அந்த பதிவில் அவர் இருபத்திரண்டாயிரம் தமிழ் பழமொழிகளைச் சேகரித்திருக்கிறார் என்ற தகவல் என்னை பிரம்மிப்பில் ஆழ்த்தியது. அவை 4 தொகுதிகளாக வெளிவந்திருக்கின்றன. இணையத்தில் இருக்கின்றன.

ஆறு ஆதி இல் - கோமதி சூர்யா மூர்த்தி

 சைவ சித்தாந்தத்தில் அடிப்படையாகக் கொள்ளப்படும் பொருட்கள் மூன்றாகும். அவை பதி, பசு, பாசம் என்பவை. பொருட்களைப் பதி, பசு, பாசம் என மூவகைப்படுத்திப் பேசுவது வேத ஆகம காலத்திலேயே உள்ளது.

சித்தாந்த வினா விடை- தொடர் 3 - அருணைவடிவேல் முதலியார்

சித்தாந்த வினா விடை 2

 சித்தாந்த வினா விடை 1

 (சென்ற தொடரில் பிரமாணம் என்பது என்ன?, அவற்றின் இயல்பு பற்றி மாணவன் கேட்ட கேள்விகளுக்கு ஆசிரியர் கூறிய பதிலின் தொடர்ச்சி)



இன்மை அளவை அல்லது அபாவப்பிரமாணம் அல்லது அனுபலத்திப்பிரமாணம் : 

குடத்தைத் தேடிக் காணாத ஒருவன், 'இங்குக் குடம் இல்லை' என்று உணர்தல், குளிர் இல்லாமை கண்டு, 'பனி இல்லை' என்று உணர்தல் அனுபலத்திப்பிரமாணமாகும். இருத்தலை உணர்தல் காட்சியாகும், இல்லாமையை உணர்தல் காட்சியாகாது என்று கொண்டு இவை காட்சியளவையும், அதன் வழியதாகிய அனுமான அளவையோடு சேராமல் வேறோர் அளவை என்பர் சிலர். ஆயினும், இவையும் உண்மையில் காட்சியும் அதன் வழிதான அனுமானமுமேயாகும்.


பொருளளவை அல்லது அருத்தாபத்திப் பிரமாணம்:  

ஒருவன் இரவில் மறைந்து உண்டு, 'யான் உண்பதில்லை' என்று கூறினால், அவன் உடல் மெலியாதிருத்தல் கண்டு அவன் இரவில் மறைந்து உண்கின்றான் எனத் துணிதல் அருத்தாபத்திப் பிரமாணமாகும். இவ்வாறு இல்லையாயின் இஃது இயலாது என உணர்தல். இஃது உண்மையை எதிர்மறை முகத்தான் உணரும் அனுமானமேயாகும்.


உவமையளவை அல்லது உபமானப் பிரமாணம்:


காட்டுப் பசு என்பது ஒன்று உண்டு என்று அறியாதவன், காட்டுக்குள் அதனைக் கண்ட பொழுது, நாட்டுப் பசுப்போல இருத்தலால் இது காட்டுப் பசுவாகும் என்று உணர்தல் உபமானப் பிரமாணமாகும். இது, கண்டமாத்திரத்தில் துணியப் படாமையால் காட்சியளவையுமல்ல, பொருளைக் கண்டே துணிதலால் அனுமானமும் அல்ல, வேறோர் அளவை என்பர் சிலர். ஆயினும், காட்சியால் பொதுத்தன்மையைக் கண்டு அதன் மூலம் 'காட்டுப் பசு' என்னும் சிறப்புப் பொருளைக் கருதி உணர்தலால் இதுவும் அனுமானமே ஆகும்.


ஒழிபளவை அல்லது பாரிசேடப் பிரமாணம்:


மூவர் உள்ள இடத்தில் ஒரு பொருள் களவு செய்யப்படின், இருவர் கள்வர் அல்லர் என்பது தெளியப்பட்டால், மீதமுள்ள மற்றொருவனே கள்வன் எனத் துணிதல் பாரிசேடப் பிரமாணமாகும். இஃது ஒருவன் கள்வன் என்பதை அதற்கு உரிய சான்று கொண்டு துணியாது, இருவர் கள்வராகாமையால்  அவன் கள்வன் என்பது அனுமானமன்று, வேறோர் அளவையாம் என்பர் சிலர். ஆயினும், மூவருள் ஒருவன் கள்வன் என்பது முன்னரே துணியப்பட்டமையாலும், இருவர் கள்வர் ஆகாமை பின்னர்த் துணியப்பட்டதாலும் இதுவும் அனுமானமேயாகும்.


உண்மையளவை அல்லது சம்பவப் பிரமாணம்:


ஓரிடத்தில் நூறு இருக்கிறதென்றால் அவ்விடத்துப் பத்தும் உண்டென்று உணர்தல் சம்பவப் பிரமாணமாகும்.  நூறும் பத்தும் காட்சிப் பொருள் இல்லாததால் இது காட்சியளவையும் அதன் வழித்தாகிய அனுமானமும் இல்லை என்பர் சிலர். ஆனால் கருத்துப் பொருளைக் கருத்துப் பொருள் ஏதுவாக ( சான்றாக)  உணரும் அனுமானமே இது.


வழக்களவை அல்லது ஐதிகப்பிரமாணம்:


ஒருமரத்திற் பேய் உண்டென்று வழிவழியாகச் சொல்லிவரும் வழக்குப் பற்றித் தானும் அவ்வாறே உணர்தல்  ஐதிகப்பிரமாணமாகும்.  இது, நூலில் இல்லாததால் உரையளவையாகாது வேறோர் அளவை என்பர் சிலர். ஆயினும், அஃது உண்மை வழக்காயின் உரையளவையே. பொய் வழக்காயின் அளவை இல்லையென்றாகும்.


இயல்பளவை அல்லது சுபாவப்பிரமாணம் 


மரம் பூத்தது என்று ஒருவன் கூறக் கேட்டு, அச்சொல்லாலே அப்பொருளை உணர்தல் சுபாவப்பிரமாணம். சொற்கள் பொருளோடு பிரிப்பின்றி நிற்பதில்லை, எனவே அவைகளைக் கொண்டு பொருளை உணர்தல் அனுமானமாகாது, இது வேறோர் அளவை என்பர் சிலர். இருப்பினும் சொல்லுணர்வு பொருளுணர்வோடு இயல்பாய் உடன் நிகழ்வதால் இஃது அனுமானமேயாகும்.


இவ்வாறு பிறர் வேறு வேறு கூறும் பிற அளவைகளும் காட்சி, கருதல், உரை  என்னும் மூன்று அளவைகளுள்ளே அடங்கிவிடும்.


 

4. காட்சியளவையின் வகை


மாணவன்: காட்சி முதலிய மூன்று அளவைகளின் இயல்பை பற்றி சுருக்கமாக கூறினீர்கள், அவைபற்றி அறிய வேண்டுவன அவ்வளவுதானா, வேறு எவையேனும் உள்ளதா?


ஆசிரியர்: உள்ளது.. வாயிற் காட்சி (இந்திரியப் பிரத்தியட்சம்), மானதக் காட்சி (மானசப் பிரத்தியட்சம்), தன் வேதனைக் காட்சி (சுவவேதனாப் பிரத்தியட்சம்), யோகக் காட்சி (யோகப் பிரத்தியட்சம்) எனக் காட்சியளவை நான்கு வகைப்படும்.


 வாயிற் காட்சி:


கண் முதலிய பொறிகள் வாயிலாகப் பொருள்களைப் பொருந்தி உணர்வதே காட்சியளவை என்று முன்பு கூறினோம். அவ்வாறு நாம் உணருமிடத்து அக்காட்சி முதலில் பொதுவாகவும், பின்பு சிறப்பாகவும், அதன் பின்பு அனுபவமாகவும் நிகழும்.


பொதுவாக நிகழும் காட்சி, 'நிருவிகற்பக் காட்சி' என்று சொல்லப்படும். அஃதாவது, இஃது ஓர் உருவம், இஃது ஓர் ஓசை,  இஃது ஒரு சுவை,  இஃது ஒரு மணம், இஃது ஓர் உராய்வு என்று மட்டும் தோன்றுவது. இவ்வாறு கண் முதலிய பொறிகளால் பொதுவாக உணரும் உணர்வே, வாயிற் காட்சியாகும்  (வாயில்-பொறி).


மானதக் காட்சி:


பொருள்களை வாயிற்காட்சியால் பொதுவாக உணர்ந்த பின்பு, சிறப்பாக உணர விரும்பினால், நாம் அந்தப் பொதுக்காட்சியை மறவாமல் பற்றி, மேலே மனம் முதலிய உட்கருவிகளைச் செலுத்தி, 'இஃது யாது?, என்று ஆராய்ந்து, 'இன்னது' என்று உணர்வோம்; இவ்வாறு உணர்வதே சிறப்புக் காட்சியாகும். இது, 'சவிகற்பக் காட்சி' எனப்படும். இது மனம் முதலிய உட்கருவிகளாலே உண்டாவதால், 'மானதக் காட்சி' எனப்படுகின்றது.


கண் முதலிய பொறி அளவில் பொருள்களைப் பொதுவாக உணர்கின்ற வாயிற் காட்சியோடு நின்றுவிட்டால், அவை இன்னது எனத் தெரியாது, அதனால், அப்பொருள்களைப்பற்றிய நினைவும் பின்னர் உண்டாகாது. மனம் முதலிய கருவிகளைக் கொண்டு, பொருள்களை ஆராய்ந்து சிறப்பாக உணர்கின்ற மானதக் காட்சி நிகழ்ந்த பின்பே, அவை இன்னது என விளங்கும். அவ்வாறு விளங்க உணர்ந்த பொருள்களே பின்னர் நினைவுக்கு வரும்.


வாயிற் காட்சியால், 'இஃது ஒரு பொருள் தோன்றுகிறது' என்று தெரிந்த பின்பு, அதனை 'இன்னதென அறிதல் வேண்டும்' என்ற எண்ணம் உண்டாகுமாயின், 'இஃது யாது?" என்னும் ஆராய்ச்சி தோன்றும். எடுத்துக்காட்டாக, கண் வாயிலாக 'இஃது ஓர் உருவம் தோன்றுகிறது, என உணர்ந்த பின்பு 'அதனை இன்னதென உணர்தல் வேண்டும்' என்ற எண்ணம் தோன்றினால், 'இவ்வுருவம் யாது?' என்ற ஆராய்ச்சி          உண்டாகும். அப்பொழுது, 'இது குற்றியோ? அல்லது மனிதனோ? என்ற ஐயப்பாடுகள் உண்டாகும். (குற்றி! என்பது பசுக்கள் நிற்குமிடத்தில் அவைகள் உராய்ந்து கொள்வதற்காக நடப்படும் மரம் அல்லது கல். அது சில வேளைகளில் ஆள் போலத் தோன்றும்). 'குற்றியோ' என உடன்பாட்டு வகையில் எண்ணுவது ‘சங்கற்பம்' என்றும், இல்லை என்று அதனை எதிர் மறுத்து எண்ணுவது 'விகற்பம்' என்றும் சொல்லப்படும். இச்சங்கற்ப விகற்பங்களாகிய ஐயப்பாடு ஐயக்காட்சியாகும்.


ஐயப்பாடு நிகழ்ந்த பின்னர், இதனை இன்னதெனத் துணிதல் வேண்டும் என்ற ஓர் எழுச்சி உண்டாகும். அப்பொழுது அப்பொருள் ஐந்து வகையில் வகுத்து உணரப்பட்டு, 'இஃது இன்னது' எனத் துணியப்படும். அவை ”பெயர், சாதி, குணம், தொழில், உடைமை” என்பன. அவ்வைந்து வகையில் வகுத்துணரப்பட்ட உருவம் மனிதனாயின், 'இவன் சாத்தன், மனிதன், கரியன், கடுநடையன் குழையினன்' என்றாற்போல உணர்தலாம். இவ்வாறு வேறு வேறு வகையில் பகுத்து உணர்தல் பற்றியே, இச்சிறப்புணர்வு, 'சவிகற்பக்காட்சி' என்றும், இவ்வாறு உணராத பொதுஉணர்வு ’நிருவிகற்பக்காட்சி' என்றும் சொல்லப்படுகின்றன. 


சவிகற்பம் வேறுபாட்டோடு கூடியது. நிருவிகற்பம்-வேறுபாடு இல்லாதது. (விகற்பம்- வேறுபாடு). சில சமயங்களில் வேறு பொருட்குரிய பெயர் முதலியவற்றை, காணப்பட்ட பொருட்குரியனவாகக் கருதுதலால், குற்றியை மனிதன் என்றும், மனிதனைக் குற்றியென்றும் மாறித் எண்ணக் கூடும். அது திரிவுக்காட்சி யாகும். ஐயக்காட்சியும், திரிவுக்காட்சியும் குற்றமுடையன. அதனால், அவை பிரமாணமாகாது. பொருள்களை அவ்வவற்றிற்குரிய பெயர் முதலியவற்றால் சவிகற்பமாக உள்ளவாறு உணர்தலே உண்மைக் காட்சி. அதுவே பிரமாணமாகும்.


தன் வேதனைக் காட்சி


பொருள்களை, வாயிற்காட்சியால் நிருவிகற்பமாகவும், மானதக் காட்சியால் சவிகற்பமாகவும் உணர்ந்த பின்னர், அப்பொருளில்  மீது       உணர்வு உண்டாகுமாயின், இன்ப நுகர்ச்சியோ அல்லது துன்ப நுகர்ச்சியோ உண்டாகும். அந்த நுகர்ச்சி உணர்வே தன்வேதனைக் காட்சியாகும். 'வேதனை என்பதை நாம், 'துன்ப அனுபவம்' என்ற பொருளில் வழங்கினும் அது, துன்ப அனுபவம், இன்ப அனுபவம் இரண்டிற்கும் பொதுவேயாகும்.


 யோகக்காட்சி


மேற்கூறிய, வாயிற்காட்சி முதலிய மூன்றும் எல்லாருக்கும் நிகழ்வன. யோகக் காட்சி, அவ்வாறின்றிச் சிலர்க்குமட்டுமே நிகழும். அஃதாவது, யோக நெறியில் உள்ள 'இயமம், நியமம் முதலிய எண்வகை நிலைகளில் நின்று, அவற்றின் முடிந்த நிலையாகிய, 'சமாதி' என்னும் நிலை கைவரப்பெற்றவர்களுக்கே நிகழும் என்பதாம். இவர்கள் உயிர்களைப் பிணித்துள்ள ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களின் கட்டுக்களை  சிறிது நெகிழ்த்துக் கொள்ளுதலால், ஏகதேச உணர்வு சிறிது நீங்கி, வியாபக உணர்வு சிறிது உண்டாகும். அதனால் அவர்கள் ஒருகாலத்தில், ஓர் இடத்தில் இருந்தே, எக்காலத்திலும் எல்லா இடத்திலும் உள்ள பொருள்களை உணர வல்லவராவர். அவ்வாறு உணரும் உணர்வே யோகக் காட்சியாகும். நம்மால் உணர முடியாத பலவற்றை முனிவர்கள் தம் யோகக் காட்சியால் உணர்ந்து நமக்கு நூல்கள் வாயிலாகச் சொல்லியிருத்தல் போன்றாகும்.


இவையே வாயிற்காட்சி முதலிய நால்வகைக் காட்சியளவைகளின் இயல்பாகும்.



கட்டுரையாளர்கள்: ஆசிரியர் குழு


ஆணவம் - பயன் - அ வே சாந்திகுமார சுவாமிகள்

 சைவசித்தாந்தாம் கூறும் முப்பொருள் உண்மை  பதி, பசு, பாசமாகும். இந்த அநாதி நித்யப்பொருள்களை அனுமானித்து நிச்சயித்து அறிதற்கு ஏதுவும்,  உவமையும் இன்றியமையாதன. "விளம்பிய ஏது நோக்கிப் பெருகிய வுவமை நான்கின் பெற்றியின் நிறுவிப் பின்முன் தருமலைவு ஒழிய" என்பது சிவப்பிரகாசம். இதனையே ''ஏதுவும் ஒது நால்வகை உவமையும் திகழ்தர அருள்சேர் மாந்தர் வெருள் சேராமல்என்று சங்கற்ப நிராகரணமும் கூறும்.