Showing posts with label "36" (இருள்-வெளி-ஒளி). Show all posts
Showing posts with label "36" (இருள்-வெளி-ஒளி). Show all posts

Sunday, July 26, 2026

"36" (இருள்-வெளி-ஒளி) - 5 - தில்லை செந்தில்பிரபு

ஆன்மதத்துவங்கள் : தன்மாத்திரைகளும் பஞ்சபூதங்களும்

முந்தைய அத்தியாயத்தில் மாயையைப் பற்றியும் அதன் வெளிப்பாடுகளான மாயேயங்களான 36 தத்துவங்களைப்  பற்றியும் சுருக்கமாகப் பார்த்தோம்.

மாயை என்பது ஆன்மாவை ஏமாற்றும் இருள் மட்டும் அல்ல.
அது இறை ஆன்மாவுக்கு அளித்த ஒரு கருவி.

“கதிர் வரும் வரை சுடர் விளக்கு” போல, பதிஞானம் உதிக்கும் வரை ஆன்மா நடந்து செல்ல மாயை ஒரு வெளிச்சம் தருகிறது என்று பார்த்தோம்.

இப்போது அந்த விளக்கின் ஒளியில், மாயையின் முதல் வெளிப்பாடுகளை நெருங்கிப் பார்க்கப் போகிறோம். இதுவரை கற்றதைத் தொகுத்துக் கொள்வோம்.


Friday, April 17, 2026

"36" (இருள்-வெளி-ஒளி) - 4 - தில்லை செந்தில்பிரபு

 மாயை - கதிர் வரும் வரை சுடர் விளக்கு

“இந்த உலகம் உண்மையானதா? அல்லது வெறும் தோற்றப் பிழையா?” – ஆன்மீகத் தேடலில் இருப்பவர்களைத் தடுமாறச் செய்யும் வினா இது.

ஆனால் சைவ சித்தாந்தம் இதற்குத் தர்க்கரீதியான ஒரு தெளிவைத் தருகிறது:

“மாயை என்பது பொய் அல்ல; அது ஒரு மூலப்பொருள். இந்த உலகம் கனவு அல்ல; அது ஒரு கட்டுமானம்.”

இருட்டறையில் இருப்பவனுக்குச் சூரியன் வரும் வரை ஒரு சிறு தீபம் எப்படித் துணையாக இருக்குமோ, அதுபோலவே ஆணவ இருளில் மூழ்கியுள்ள ஆன்மாவிற்குப் பக்குவம் வரும் வரை துணையாக இருப்பது ‘மாயை’ எனும் கருவியே.


Monday, January 26, 2026

"36" (இருள்-வெளி-ஒளி) - 3 - தில்லை செந்தில்பிரபு

     "36" (இருள்-வெளி-ஒளி) - 1


உங்கள் வாழ்க்கையைக் கட்டிப் போட்டிருக்கும் கண்ணுக்குத் தெரியாத கயிறு!

நம் வாழ்க்கையில் அவ்வப்போது இப்படிப்பட்ட கேள்விகள் நமக்குள் வரும்:

  • ​“நான் நினைத்ததை அடைய இடைவிடாமல் முயற்சி செய்கிறேன். என்ன சரி, என்ன தவறு என்பதும் எனக்குத் தெளிவாகத் தெரிகிறது. ஆனாலும், நினைத்தது ஏன் நடப்பதில்லை? ஒரு சிலருக்கு மட்டும் எந்த முயற்சியுமே இல்லாமல் எல்லாம் வசப்படுகிறதே, அது எப்படி?"
  • "எனக்கு வரும் கஷ்டங்கள் போல வேறு யாருக்கும் இல்லையே? அப்படி என்ன மகா தவறு செய்துவிட்டேன்?"
  • ​“என் முயற்சி போதவில்லையா? அல்லது என் முயற்சிகள் செல்லுபடியாகாத வேறு ஏதோ ஒரு தளம் இங்கே இருக்கிறதா?”



Tuesday, November 18, 2025

"36" (இருள்-வெளி-ஒளி) - 2 - தில்லை செந்தில்பிரபு

    "36" (இருள்-வெளி-ஒளி) - 1

நமது முந்தைய அத்தியாயத்தை, "சிந்திப்பதால் நான் இருக்கிறேனா? அல்லது இருப்பதால் சிந்திக்கிறேனா?" என்ற ஆழமான கேள்வியில் இருந்து ஆரம்பித்தோம். அத்துடன், சைவ சித்தாந்தம் எந்தக் காலகட்டத்தில் உருவானது, அது இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்களுடனும் மற்றும் பிற அக/புறச் சமயங்களுடனும் எவ்வாறு இணைகிறது என்பதைப் பார்த்தோம். சித்தாந்தத்தின் மையமான பதி, பசு, பாசம் என்ற மூன்று அடிப்படை உண்மைகளைச் சுருக்கமாக அறிமுகப்படுத்தினோம்.


Tuesday, September 16, 2025

"36" (இருள்-வெளி-ஒளி) - தில்லை செந்தில்பிரபு

ஒரு ஞானப் பயணம்

குரு பௌர்ணமி நாளன்று, நண்பர் முத்துமாணிக்கம் சைவ சித்தாந்தத்தின் 36 தத்துவங்கள் குறித்து ஒரு தொடர் எழுதுமாறு வேண்டினார். இது வெறும் வேண்டுகோளாக இல்லை; எனக்கு அது இறையாணையாகவே தோன்றியது. உடனே மகிழ்ச்சியுடன் சம்மதித்தேன்.