Thursday, July 3, 2025

சத்திநிபாதம் - கோமதி சூரியமூர்த்தி

உயிர்கள் இறைவனை உணரெவாட்டாமல் மலத்தால் பிணிக்கப்பட்டுள்ளன. உயிர்களதும் மலம் பரிபாகமடைதற்பொருட்டு அம்மலத்திற்கு அனுகூலமாய் நின்று ஆன்மாக்களை நடத்தி வருவது சிவபெருமானது திரோதான சக்தி என்னும் மறக்கருணை ஆகும். (திரோதான சக்தி என்பது சைவ சித்தாந்தத்தில் இறைவனின் பஞ்ச கிருத்தியங்களுள் (ஐந்து செயல்கள்) ஒன்று. இது உயிர்களை உலக அனுபவங்களில் ஆழ்த்தி, அவற்றின் உண்மை நிலையான இறைவனை மறக்கச் செய்யும் ஒரு சக்தியாகும். மறைத்தல் தொழிலைச் செய்யும் இந்த சக்தி, உயிர்கள் பக்குவமடைந்த பின், அருட்சக்தியாக மாறி, அவர்களை இறைவனை அடையச் செய்கிறது)


 ஆன்மாக்களது மலம், பரிபக்குவம் அடைந்ததும் திரோதான சக்தி பராசக்தியாக மாறி ஆன்மாக்களிடத்தில் பதிதல் அறக்கருணை என்பதாகும் இதுவே சக்தி விவாதம் எனப்படும். இதனை சிவபெருமான் ஆன்மாக்களுக்கு சொர்க்கம் முதலியவற்றை கொடுத்து சத்திநிபாதம் பதித்து அருளுவதை குமரகுருபரர் கந்தர் கலிவெண்பாவில் விளக்கமாக எடுத்துரைத்துள்ளார்.


"சொர்க்காதி போகம் எல்லாம் துய்ப்பித்து பக்குவத்தால் நற்காரணம் சிறிது நண்ணுதலும்".....


சக்தி என்பது திருவருளைக் குறிக்கும். நிபாதம் என்றால் வீழ்ச்சி என பொருள்படும். சக்தி நிபாதம் என்றால் திருவருள் வீழ்ச்சி என்பதாகும். அதாவது உயிர்களிடத்து திருவருள் வீழ்தல் - பதிதல் என பொருளாகும். இதனை சக்தி பதிதல் என்று சொல்லாமல் வீழ்த்தல் என சொல்ல காரணம் ஓர் அவையில் பலரும் கூடியிருக்கும் போது ஒரு கல் வந்து விழுந்தால் அங்கு இருப்பவர்களுக்கு அது ஓர் அதிர்ச்சியை உண்டாக்குவது போல திரோதான சக்தி அருட் சக்தியாக பதியும்போது அப்பதிவு ஆன்மாவிற்கு ஒரு அதிர்ச்சியை உண்டாக்குதல் பற்றியாகும்.


பதியும் காலம்:


திருவருள் எங்கும் எப்போதும் நிறைந்துள்ளது என்று கூறுகின்றோம். அப்படி இருக்க, திருவருள் உயிர்களிடத்து வந்து பதிதல் என்பது அது ஒரு உயிருக்கு வேறாக இருந்து பின் வந்து பொருந்துகின்றதோ என்ற ஐயத்தை எழுப்பும் அல்லவா? திருவருளானது உயிர்களிடத்து எப்போதும் வியாபித்து நின்றாலும் உயிர்களானவை உலகியலில் தோய்ந்திருக்கும் பொழுது தன்முனைப்பு ஓங்கி நிற்பதால் அதனை உணர முடிவதில்லை. தன்முனைப்பு நீங்கினால் திருவருளை உணரும். தன்முனைப்பு நீங்குவது எப்படி? அதற்கு உயிர்கள் தவநெறியில் நிற்றல் வேண்டும். தவ நெறியானது யாது? சிவ வழிபாட்டு நிலையில் நிற்றல். ஒளவையாரும் "சிவத்தை பேணின் தவத்திற்கு அழகு" என்று கொன்றை வேந்தனில் கூறுகிறார்.


 முக்தி இன்பம் தருவது சிவன். ஆகையால் முத்தி இன்பத்திற்கு வாயிலாகச் சிவனை நோக்கிச் செய்யும் வழிபாடுகள் உண்மை தவம் எனப்படும். சரியை, கிரியை, யோகங்களை செய்து புண்ணியப் பேறடைந்தோரை நான்கு சக்தி பாதத்திற்கும் உரியவராவர் என்று சிவப்பிரகாசம் கூறுகின்றது. இத்தகைய வழிபாட்டு நெறியில் இருப்பதால் உயிர்களின் மனநிலையில் ஒரு பக்குவம் உண்டாகிறது பக்குவம் என்பது யாது? இருவினையொப்பு, மலபரிபாகமே பக்குவம் என்று கூறப்படும். 


இருவினையொப்பாவது நல்வினை தீவினையினால் உண்டாகிற இன்ப துன்பத்தை சமமாக பாவிக்கும் பண்பாகும். மல பரிபாகம் என்பது ஆணவ மலத்தின் சக்தி குன்றி போவதாகும்.

இத்தகைய பக்குவ நிலையை உயிர்கள் அடையும் போது உயிர்களிடத்து திருவருள் பதியும். இதனை "ஆட்பாலவருக்கருளும் வண்ணம்" என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.


எனவே இருவினையொப்பும் மலபரிபாகமும் வருங்காலத்தில் சக்திநிபாதம் நிகழும் என அறியலாம். சூரியன் உதிப்பதும், இருள் நீங்குவதும் ஏக காலத்தில் நிகழ்வன. அப்படியே மல பரிபாகமும் சக்தி விவாதமும் ஏககாலத்தில் தான் நிகழும்.


சத்திநிபாதம் பதியும் முறை:

உயிர்களிடத்து மல பரிபாகம் படிமுறையால் தான் நிகழும் எனவே சக்தி நிபாதமும் உயிர்களிடத்து படிமுறையாகவே பதியும். அவ்வாறு பதியும் முறை நான்கு படிகளில் நிகழும். அவை, அதிமந்தம், மந்தம், தீவிரம், அதிதீவிரம் என்பதாகும்.


 இவ்வாறு இந்த நாலு வகையாக பதியும் முறையை நான்கு உவமைகள் மூலம் விளக்குவது சிவானந்தமாலை என்ற நூல் ஆகும்.


முதல் நிலையான மிக மந்த நிலைக்கு உவமையாக வாழைத்தண்டிலே நெருப்பு பற்றினால் எப்படி வாழை எறியாதோ அதேபோல ஆன்ம உணர்வில் அருட்கனல் பாய்ந்தாலும் பயன் விளைவது இல்லை என்பதாகும்


இரண்டாம் நிலையான மந்தத்துக்கு பச்சை விரைவில் நெருப்பு பற்றினால் பச்சை பிறகு அதிக முயற்சி செய்து பற்ற வைப்பது போன்று உயிரின் உணர்ச்சியில் கனல் சிறிது சிறிதாக தன் கருமத்தை செய்யும் நிலை ஆகும்


மூன்றாம் நிலையான தீவிர சக்தி நிவாதமானது உலர்ந்த விரைவிலே நெருப்பு பற்றினால் அந்த விறகு சிறிது முயற்சியிலேயே பற்ற வைப்பது போல் ஆன்ம உணர்வில் ஞானக்கனல் சிறிது முயன்றாலும் பயன் பற்றி விளையும்


நான்காவது நிலையான தீவிர சக்தி விவாதமானது கருகிலே நெருப்பு பற்றினார் போன்றது போல கற்பூரத்தில் நெருப்புப் பற்றுவதை ஊமையாக கூறுவது ஆன்மாவில் ஞானக்கினைப் பாய்ந்து மலத்தை அகற்றி ஆன்மாவை தங்கம் போல் ஆகும் இறை பணி செய்ய கற்பிக்கும்.


இதுவே இந்த நான்கு நிலைகளுக்கான உவமையாகும்.


சக்திநிபாதம் பெற்ற உயிர்களின் நிலை: 

சத்தினி பாதம் உயிர்களிடத்து படிமுறையில் நிகழ்வதால் அதற்கு ஏற்ப உயிர்களின் அறிவிலும் படிமுறையாகவே தெளிவு பிறக்கிறது நமக்கு வேறாயுள்ள ஒரு பதிவு உண்டு என்றறிதல் முதல் நிலை, அப்பதியை அடைவதற்கு வழி எப்படி என்று ஆராய்தல்.


இரண்டாம் நிலை அப்படி ஆராய்ந்து அறிந்து பதியை  அடைவதற்கு பிரபஞ்சத்தை வெறுத்து புளியம்பழமும் அதன் ஓடும் போல நிற்றல்.


மூன்றாம் நிலை பிரபஞ்சத்தை முற்றும் துறந்து ஞானாசிரியனே பொருள் என கண்டு வழிபடுதல். 


தீவிர தர நிலை உலக போகங்களில் வெறுப்பு சிவ சாத்திரப் பயிற்சியில் பற்று சிவனடியார் பால் பக்தி சிவ சின்ன காரணங்களில் அன்பு சைவாசாரியனை அடைய நாட்டம் முதலியன அருள்பெற்ற உயிர்களின் வால் காணப்படும் அடையாளங்கள் ஆகும் நாள் வகை சத்து நிபாதத்தின் தன்மைக்கேற்ப உயிர்கள் சரியை கிரியை யோக ஞான நெறியில் நிற்கும் சக்தி நிவாதம் கைவிரப்பெற்ற உயிர்கள் அந்நியமின்றி அறன்கழல் செல்லும் ஏகனாகி இறைப்பணி நிற்கும் தீவிர தர சக்தி நிவாதம் பொருந்திய உயிர்களின் நிலையை இருவினை நேரொப்பில் இன்னருக்கு சக்தி என்று திருமூலர் கூறுகின்றார் அருள்பெற்ற உயிர்கள் கூத்துடையான் திருவடிகளுக்கு அன்பு செய்யும் எலும்புருக்க பாடும் கூத்தாடும் வணங்கும் திருவடி மலரை சென்னையில் அணியும் இதய மலரை சிவனுக்கே சார்த்தும் தெரிந்தோறும் நின்று அலறித் தேடி அச்சிமம் தன்னுள்ளேயே இருப்பதாக உணரும் இத்தகைய மேம்பாட்டு நிலைகளை மாணிக்கவாசகர் 

"ஆடுகின்றலை கூத்துடையான் கலர் கன்பிலை என்புருகி" என்று திருச்சதகத்தில் பாடுகிறார்.


அடையும் பயன்:


தீவிர தர சக்தி நிவாதம் பொருந்தப் பெற்ற உயிர்களுக்கு சிவம் விளங்கித் தோன்றும் அத்தகைய உயிர்கள் சிவானந்தத்தை அழுத்தி அனுபவிக்கும் விஞ்ஞானிகள் அச்சுவானந்தத்தை இந்த உடல் உள்ள பொழுதே அனுபவிப்பர் இதை திருமூலர் 

"சைவம் சிவானந்தம் சாயுச்சியமே

என்று திருமந்திரத்தில் விளக்குகிறார்.


கட்டுரையாளர்: கோமதி சூர்யா மூர்த்தி

கோமதி சூர்யா மூர்த்தி அவர்கள் தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க சைவ சித்தாந்த துறையில் மிகப்பெரிய ஆளுமை. பல்வேறு நூல்களும், கட்டுரைகளும், எழுதி உள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சைவ சித்தாந்த துறையில் தலைமை பொறுப்பு வகித்தவர்.


0 comments:

Post a Comment